டாடா மோட்டார்ஸ் ரூ. 9,000 கோடிக்கு முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

5 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸ் ரூ. 9,000 கோடிக்கு முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
படம்: https://twitter.com/TRBRajaa

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடிக்கு முதலீடு செய்வதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இதுதொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்மூலம் 5 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். வெறும் 2 மாதகால இடைவெளியில் இருபெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை ஈர்ப்பது தமிழ்நாட்டில் இதுவே முதன்முறை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த ஜனவரியில் இருநாள்கள் நடைபெற்றது. இந்த மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ. 6.64 லட்சம் கோடி என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜனவரி 27-ம் தேதி அரசுமுறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 7-ம் தேதி சென்னை திரும்பினார். இந்தப் பயணத்தின் மூலம் ரூ. 3,440 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in