மருத்துவ, துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற பி. ரஜ்னீஷ் என்ற மாணவர் இந்த தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்
மருத்துவ, துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு
1 min read

2024-2025 கல்வி ஆண்டுக்கான தமிழக மருத்துவப் படிப்புகள் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டார் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

இது தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், `தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு 9,200 இடங்களும், இளநிலை பல் மருத்துவப் படிப்புக்கு 2,150 இடங்களும் உள்ளன. கடந்தாண்டை விட இந்தாண்டு 150 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டிக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற பி. ரஜ்னீஷ் என்ற மாணவர் இந்த தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை சையத் ஆரிஃபின் யூசுப் என்ற மாணவரும், மூன்றாவது இடத்தை ஷைலஜா என்ற மாணவியும் பிடித்துள்ளனர்.

நர்சிங், ஃபார்மஸி ஃபிசியோதெரபி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலையும் இன்று வெளியிட்டார் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன். துணை மருத்துவப் படிப்புகளுக்கு 68,108 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 67,038 தகுதியான விண்ணப்பங்கள் அரசால் ஏற்கப்பட்டுள்ளன என்று அவர் தகவல் தெரிவித்தார்.

இந்த தரவரிசைப் பட்டியல்களை www.tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in