2025 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பா?: தமிழ்நாடு அரசு விளக்கம்

திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டு அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.
2025 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பா?: தமிழ்நாடு அரசு விளக்கம்
https://www.youtube.com/@NarendraModi
1 min read

வரும் 2025 தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்துள்ளது தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்.

தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் நேற்று (டிச.22) எடப்பாடி பழனிசாமி பதிவிட்டவை பின்வருமாறு,

`குடியரசு தின விழாவில், தலைநகர் தில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.

ஆனால் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டு அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். மு.க. ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்’ என்றார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த 6 ஜனவரி 2024-ல் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பிய கடிதத்தின் நகலை இணைத்து, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அளித்த விளக்கம் பின்வருமாறு,

`2025-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் தில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாக வதந்தி பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 2025-ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.

தில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் மட்டுமே மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் அனைத்து ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது.

2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்க முடியும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in