மாபெரும் 7 தமிழ்க் கனவு: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் அம்சங்கள் வெளியீடு

தடைகளைத் தாண்டி எனும் தலைப்பில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னத்தைத் தமிழ்நாடு அரசு முன்பு வெளியிட்டது.
மாபெரும் 7 தமிழ்க் கனவு: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் அம்சங்கள் வெளியீடு
படம்: https://twitter.com/tndiprnews
1 min read

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதன் 7 அம்சங்களை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ம் தேதி கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளார். தடைகளைத் தாண்டி எனும் தலைப்பில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது நிதிநிலை அறிக்கையின் 7 அம்சங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மாபெரும் 7 தமிழ்க் கனவு என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என 7 அம்சங்களை அரசு குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in