ஜூலை 22-ல் பொறியியல் கலந்தாய்வுகள் தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் தரவரிசை பட்டியலில் 65 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் முதல் இரண்டு இடங்களை மாணவிகள் பெற்றுள்ளனர்
ஜூலை 22-ல் பொறியியல் கலந்தாய்வுகள் தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் அளித்தனர். இதனை அடுத்து பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வீரராகவ ராவ் இன்று காலை (ஜூலை 10) வெளியிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் இயக்குநர் வீரராகவ ராவ். அவரது உரையின் சுருக்கம்:

`தமிழ்நாடு உயர்கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024-க்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் தகுதிவாய்ந்த 1,99,868 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7.5 சதவீத பொறியியல் இடங்களுக்கு, 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த 32,223 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22-ல் தொடங்கும்’.

பொறியியல் தரவரிசை பட்டியலில் 65 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் முதல் இரண்டு இடங்களை மாணவிகள் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in