பாஜகவில் மீண்டும் இணைந்தார் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழங்கியுள்ளார்.
பாஜகவில் மீண்டும் இணைந்தார் தமிழிசை சௌந்தரராஜன்
பாஜகவில் மீண்டும் இணைந்தார் தமிழிசை சௌந்தரராஜன்@DrTamilisaiGuv

சமீபத்தில் ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019-ல் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி, அந்தப் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த 2021 பிப்ரவரியில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது.

இதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இதைத் தொட்ர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் மார்ச் 18-ல் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அவருக்கான உறுப்பினர் அடையாள அட்டையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழங்கியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in