விஜய் தலைமையில் தவெகவின் கல்வி விருது விழா தொடங்கியது

விழா தொடங்கியதும் சாதி ஆதிக்கத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரையுடன் அமர்ந்தார் விஜய்.
விஜய் தலைமையில் தவெகவின் கல்வி விருது விழா தொடங்கியது
ANI

தமிழக வெற்றிக் கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான கல்வி விருது விழங்கும் விழா, தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் தொடங்கியது.

விழா தொடங்கியதும் சாதி ஆதிக்கத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரையுடன் அமர்ந்தார் விஜய்.

இந்த விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருது பெற உள்ளனர். விழாவில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பிரத்தியேகமான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

விழா நடக்கும் அரங்கத்துக்குள் மாணவர்கள் கைப்பேசிகள், நோட்டு, பேனா போன்றவற்றை எடுத்துச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதால் விழா முடிய நீண்ட நேரம் ஆனது. எனவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இந்த வருடம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருது வழங்கினார் விஜய்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in