
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏறத்தாழ நவம்பர் 30 அன்று கரையைக் கடக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இருந்தபோதிலும், கரையைக் கடக்கும் இடம் குறித்த தகவல் வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படவில்லை.
சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கரையைக் கடப்பது குறித்த தகவலை சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
"காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்/புயலானது பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் சென்னை இடையே ஏறத்தாழ நவம்பர் 30 அன்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. சென்னை மண்டலத்தில் நவம்பர் 29, நவம்பர் 30-ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழைக்கான கணிப்பு
நவம்பர் 27 - லேசானது முதல் மிதமான மழை
நவம்பர் 28 - மிதமான மழை
நவம்பர் 29 - கனமழை
நவம்பர் 30 - மிகக் கனமழை முதல் அதிகனமழை
டிசம்பர் 1 - மிதமான மழை
டிசம்பர் 2 - மிதமான மழை
இது கரையைக் கடந்தவுடன் உள்மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.