தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) உடல்நலக்குறைவால் காலமானார்.
நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 அன்று சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்டார் வெள்ளையன். உடல்நலம் மேலும் குன்றியதையடுத்து, செப்டம்பர் 5-ல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிர் பிரிந்தது.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
வெள்ளையனின் உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வணிகர்களுக்காக, வணிகர்களைக் காக்கவும், வணிகர்களுக்காகக் குரல் கொடுக்கவும் வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை. இதை உருவாக்கியவர்தான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன்.