பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
1 min read

தீபாவளி பண்டிகை நாளன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

வரும் அக்.31-ல் நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த சில வருடங்களாக பொதுவெளியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடால் தீபாவளி நாளன்று பட்டாசுகளை வெடிக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடப்பாண்டு தீபாவளி நாளன்று பட்டாசுகளை வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். மிக முக்கியமாக, அக்.31-ல் தமிழகத்தில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்துள்ளது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். மேலும் அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிலும் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். அத்துடன் மருத்துவமனைகள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in