
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.
tnresults.nic.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம், அல்லது படித்த பள்ளிகள் வழியாகவும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
7,92,494 பள்ளி மாணாக்கர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,19,316, மாணவர்கள் எண்ணிக்கை 3,73,178 ஆகும்.
தேர்ச்சி விவரங்கள்:
ஒட்டுமொத்தமாக 7,53,142 (95.03%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
4,05,472 (96.7%) மாணவிகளும், 3,47,670 (93.16%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாகும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: 93.1% (8,019 மாணவர்களில், 7,466 மாணவர்கள் தேர்ச்சி)
சிறைவாசிகளின் தேர்ச்சி விகிதம்: 92.86% (140 பேரில் 130 பேர் தேர்ச்சி)
பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:
அரசுப் பள்ளிகள்: 91.94%
அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.71%
தனியார் சுயநிதி பள்ளிகள்: 98.88%
மாணவர்கள் தேர்ச்சி விகித வாரியாக முதல் 5 மாவட்டங்கள்:
அரியலூர் (98.82%)
ஈரோடு (97.98%)
திருப்பூர் (97.53%)
கோவை (97.48%)
கன்னியாகுமரி (97.01%)
100-க்கு 100 பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:
தமிழ் 135
கணினி அறிவியலில் 9,536
வேதியியல் 3,181
கணிதம் 3,022
வணிகவியல் 1,624
இயற்பியல் 1,125
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 26,887
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் மாணவர்களின் எண்ணிக்கை: 2,853