நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் காலமானார்

செல்வராஜின் மறைவுக்கு தமிழக முதல்வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் காலமானார்

நாகப்பட்டினம் எம்.பி. எம். செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான செல்வராஜ், நாகப்பட்டினம் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். 1989, 1996, 1998, 2019 ஆண்டுகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்று, எம்.பி. ஆனார்.

திருவாரூரைச் சேர்ந்த செல்வராஜ், 1957-ல் பிறந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். சமீபத்தில் சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் தொற்று, இதயப் பிரச்னை காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை, செல்வராஜ் காலமானார். அவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளார்கள்.

செல்வராஜின் மறைவுக்கு தமிழக முதல்வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in