பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தின் கீழ் பயன்பெற...
பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
1 min read

சுய தொழிலில் பெண்கள் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்தவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் 'இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த மார்ச் 8-ல் சென்னையில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 250 பெண்களுக்கு சி.என்.ஜி. ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக பெண்கள் இத்திட்டத்தில் பயன் பெற, தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிங்க் ஆட்டோக்கள் அரசு திட்டத்தின் கீழ் பயன்பெற இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள் :

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் காலம் 06.04.2025 வரை

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சென்னையில் குடியிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு (அ) தெற்கு),

8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை,

சென்னை 600001.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in