
நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் அண்மைக் காலமாக தெரு நாய்களின் தொல்லை பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. நாள்தோறும் ஏதேனும் ஓர் இடத்தில் தெரு நாய் கடித்ததாக ஏதேனும் ஒரு சம்பவமாவது பதிவாகி வருகிறது. 2024-ல் நாடு முழுவதும் 37.17 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவானதாக மத்திய இணையமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும், கருணைக் கொலை செய்யப்பட்ட நாய்கள் குறித்த ஆவணங்கள் சரவர பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி வழங்க அம்மாநில அரசு அண்மையில் முடிவு செய்தது.
தெரு நாய்கள் பல ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஞ்சப்படும் நிலையில், அரசுகள் இம்முடிவுகளை எடுத்து வருகின்றன.
Stray Dogs | Diseased Stray Dogs | Euthanise | Tamil Nadu Government