சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீது பதிலுரை ஆற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டபேரவையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன்கள் துறை - சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை- திட்டம், வளர்ச்சி, மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை உள்ளிட்டவை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்கினார்.
இதற்கு முன்னதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
துணை முதல்வர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
ரூ.55 கோடியில் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2025 சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்படும்
ரூ.45 கோடியில் ‘முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா’ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்படும்
25 ஆயிரம் விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
ரூ.120 கோடியில் 40 தொகுதிகளில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்
ரூ.1000 கோடியில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் 3.o - மிகவும் ஏழைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ரூ. 25 கோடியில் 2,500 சிறப்பு சுய உதவிக்குழுக்களுக்கு வாழ்வாதார நிதி வழங்கப்படும்.
ரூ. 66 கோடியில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களின் தனித்துவமான உணவுப் பொருட்களைப் பொதுமக்கள் உண்டு சுவைத்திட 5 மண்டலங்களில் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும்.
11 பல்கலைக்கழகங்களில் ‘நான் முதல்வன்’ செயல் மையங்கள் அமைக்கப்படும்.