கள்ளக்குறிச்சி: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு

விஷச் சாராயம் அருந்தியவர்கள் மொத்தம் 216 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி மொத்தம் 216 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். இன்னும் 17 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். இன்னும் 4 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலேயே அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இங்குதான் உயிரிழப்பும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது. இங்கு இன்னும் 108 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

சேலம் அரசு மருத்துவமனையில் மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள். 30 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in