ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு
1 min read

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநில முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ராணுவ முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும்.

இதன்படி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையிலுள்ள சுதந்திரப் பொன் விழா அரங்கில் இன்று மாலை சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆளுநரின் இந்த விழாவையும், தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அறிவித்தன. திமுகவும் இந்த விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

ஆளுநர் என்கிற அந்தப் பதவியின் மீதும் அந்தப் பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருப்பதால், தேநீர் விருந்தில் முதல்வரும், அமைச்சர்களும் கலந்துகொள்வோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வரை வரவேற்றார். சுதந்திரப் பொன் விழா அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மூத்த அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் ஆளுநர் அமர்ந்த வட்டமேசையில் அமர்ந்து கலந்துகொண்டார்கள்.

இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in