தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் டாஸ்மாக் மோசடி குறித்த அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டு தொடர்பாக அமளியில் ஈடுபட்டார்கள். இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். 2026-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது.
நிதிநிலை அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்
அரசு ஊழியர்கள் 15 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பு நாள்களைச் சரண் செய்து பண பலன் பெறும் திட்டம் மீண்டும் தொடக்கம். கொரோனா காலத்தில் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
20 லட்சம் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிப்பு
வரும் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ. 2.49 லட்சம் கோடி ஆக அதிகரிக்கும் எனக் கணிப்பு.
நடப்பு நிதியாண்டில் சொந்த வரி வருவாய் 1.92 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் டிசம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் கோவை, மதுரையில் மெட்ரோ அமைக்கும் பணி தொடக்கம்.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும்.
சென்னை கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ. 50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.
3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யத் திட்டம்
ரூ. 70 கோடி செலவில் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கத் திட்டம்
சென்னை 950, மதுரை 100, கோவை 75 என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் அறிமுகம்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் டிசம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் டிசம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: தங்கம் தென்னரசு#ChennaiMetro #Poonamallee #Porur #MKStalin #ThangamThenarasu #CMMKStalin #TamilNadu #TNGovt #TNBudget #TamilNaduBudget #TNBudgetlive #Budget #TNBudget2025 #TamilNadu #KizhakkuNews pic.twitter.com/gVHjmFYX3G
— Kizhakku News (@KizhakkuNews) March 14, 2025
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு#Rameswaram #Airport #MKStalin #ThangamThenarasu #CMMKStalin #TamilNadu #TNGovt #TNBudget #TamilNaduBudget #TNBudgetlive #Budget #TNBudget2025 #TamilNadu #KizhakkuNews pic.twitter.com/AdWkZZIr7g
— Kizhakku News (@KizhakkuNews) March 14, 2025
கோவை, பல்லடத்தில் செமி கன்டக்டர் பூங்கா
ஒசூர், விருதுநகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
கடலூர், புதுக்கோட்டையில் தொழில் பூங்கா
திருச்சியில் தொழில் பூங்கா
ஒசூரில் அறிவுசார் பெருவழித்தடம்
மதுரையில் காலணித் தொழில் பூங்கா
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு
2,676 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக தரம் உயர்த்த ரூ. 65 கோடி ஒதுக்கீடு
2,000 அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்களின் தரம் உயர்த்த ரூ. 160 கோடி
880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் தரம் உயர்த்த ரூ. 56 கோடி
மாணவர் நலன்#SmartClass #Computers #Labs #MKStalin #ThangamThenarasu #CMMKStalin #TamilNadu #TNGovt #TNBudget #TamilNaduBudget #TNBudgetlive #Budget #TNBudget2025 #TamilNadu #KizhakkuNews pic.twitter.com/K2XUKJbaXu
— Kizhakku News (@KizhakkuNews) March 14, 2025
சென்னை வேளச்சேரியில் ரூ. 310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும்.
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரிகள் நிறுவப்படும் என அறிவிப்பு
சிவகங்கை - கீழடி
சேலம் - தெலுங்கனூர்
கோவை - வெள்ளலூர்
கள்ளக்குறிச்சி - ஆதிச்சனூர்
கடலூர் - மணிக்கொல்லை
தென்காசி - கரிவலம்வந்தநல்லூர்
தூத்துக்குடி - பட்டணமருதூர்
நாகப்பட்டினம்
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ. 2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் - ரூ. 400 கோடி
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
மேலும் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
மகளிர் விடியல் பயணத் திட்டம் - ரூ. 3,600 கோடி ஒதுக்கீடு
மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் - ரூ. 13,807 கோடி ஒதுக்கீடு
புதிதாக 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்
வரும் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன் வழங்கப்படும்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26: மகளிர் நலன்!#Women #MKStalin #ThangamThenarasu #CMMKStalin #TamilNadu #TNGovt #TNBudget #TamilNaduBudget #TNBudgetlive #Budget #TNBudget2025 #TamilNadu #KizhakkuNews pic.twitter.com/XIC5Iom8y6
— Kizhakku News (@KizhakkuNews) March 14, 2025
100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு விடுவிக்காமல் உள்ள நிலுவைத் தொகை ரூ. ரூ. 3,790 கோடி.
சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம்
சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம்: தங்கம் தென்னரசு#Chennai #City #MKStalin #ThangamThenarasu #CMMKStalin #TamilNadu #TNGovt #TNBudget #TamilNaduBudget #TNBudgetlive #Budget #TNBudget2025 #TamilNadu #KizhakkuNews pic.twitter.com/DGXYcAFvYC
— Kizhakku News (@KizhakkuNews) March 14, 2025
கோவை உள்பட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு
ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க ரூ. 22 கோடி நிதி ஒதுக்கீடு
ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்க ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு
துபாய், மலேசியா, சிங்கப்பூரில் தமிழ்ப் புத்தகக் காட்சிகளை நடத்த ரூ. 2 கோடி நிதி
ஊரகப் பகுதியில் ரூ. 3,500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் என அறிவிப்பு.
ஐ.நா. அவையிலுள்ள 193 நாடுகளுக்கும் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்.