
தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தில்லியில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:
தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் நட்டா, அமைப்புப் பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்தேன். தமிழக பாஜக குறித்து உரையாடினேன். 2026 தமிழ்நாட்டுக்கு முக்கியமான தேர்தல். அது தமிழக நலனுக்கான தேர்தல். கூட்டணி தொடர்பாகப் பேச காலம் இன்னும் உள்ளது. கட்சியின் நலன் முக்கியம். அதைவிடவும் தமிழக மக்களின் நலன் முக்கியம். கூட்டணி தொடர்பாகத் தகுந்த நேரத்தில் தலைவர் பேசுவார்கள். மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தைத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். கூட்டணியைப் பற்றி இப்போது பேசவேண்டிய அவசியம் இல்லை. இன்னும் ஓர் ஆண்டு முழுமையாக உள்ளது.
ஊடக வெளிச்சத்துக்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். ராகுல் காந்தியைப் பற்றி விஜய் பேச முடியாது.
ரெட்ஜெயண்ட் நிறுவனத்தை குருவி படத்தின் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் விஜய் தான்.
மைக்கில் நின்று பேசுவதில் மட்டுமல்ல அரசியல். களத்தில் நின்று வேலை பார்க்க வேண்டும். விஜய் பேசும்போது அரசியல் புரிதலோடு பேசவேண்டும். கட்சி ஆரம்பித்து எத்தனைமுறை ஏசி காரைத் தாண்டி வெளியே வந்தீர்கள் என்று பேசியுள்ளார்.