ஜூன் 24-ல் சட்டப்பேரவை கூடுகிறது

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் நடைபெறவுள்ள முதல் கூட்டத்தொடர் என்பதால், நிறைய முக்கியமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 24-ல் சட்டப்பேரவை கூடுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24-ல் கூடவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

"வரும் ஜூன் 24-ல் காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். அன்றைய தினம் முதல் எத்தனை நாள்கள் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற வேண்டும், எந்தெந்த தேதியில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்பதையெல்லாம், அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்" என்றார் அப்பாவு.

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பதவியேற்பது குறித்த தேதியும் முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் நடைபெறவுள்ள முதல் கூட்டத்தொடர் என்பதால், நிறைய முக்கியமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு மற்றும் மேகேதாட்டுவில் புதிதாக அணை கட்டப்படுவது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in