அண்ணாமலை போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் அரசியலில் நான் இருக்க விரும்பவில்லை என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் எஸ்.வி. சேகர், “நான் பாஜகவில் இருந்து வந்துவிட்டேன். நான் பாஜகவில் இல்லை. அண்ணாமலை போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் அரசியலில் நான் இருக்க விரும்பவில்லை.
மோடி அழைத்தார் என்பதற்காக நான் பாஜகவில் இணைந்தேன். என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை பல முயற்சிகளை செய்தும் அவரால் ஒன்னும் பண்ண முடியவில்லை. அண்ணாமலை போன்ற மோசமான தலைவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பது அசிங்கம் என எண்ணி பாஜக உறுப்பினர் அட்டையை நான் புதுப்பிக்கவில்லை.
எனக்கு இனி அரசியல் தேவையில்லை. எனவே இனி எல்லோருக்குமான நல்ல ஒரு நண்பனாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக, ஒரு திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.