ஏ.சி. சண்முகத்தை மத்திய அமைச்சராக அனுப்புகிறீர்கள்: சுந்தர்.சி பிரசாரம்

"ஏ.சி. சண்முகம் எனது மூத்த அண்ணன். அவர் பதவியில் இல்லாத போதே மருத்துவ முகாம், வேலை வாய்ப்புகள் என பல நன்மைகளை செய்துள்ளார்".
சுந்தர்.சி
சுந்தர்.சி

வேலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு வாக்கு கேட்டு சுந்தர்.சி பிரச்சாரம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாகப் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

சுந்தர்.சி பேசியதாவது:

“ஏ.சி. சண்முகம் எனது மூத்த அண்ணன். அவர் பதவியில் இல்லாத போதே மருத்துவ முகாம், வேலை வாய்ப்புகள் என பல நன்மைகளை செய்துள்ளார். பதவிக்கு வந்தபிறகு என்னவெல்லாம் செய்வார் என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டு போட்டு இந்தத் தொகுதியின் எம்பியாக அவரை அனுப்பவில்லை, ஒரு மத்திய அமைச்சராக அனுப்புகிறீர்கள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in