பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22-லிருந்து கோடை விடுமுறை தொடங்குகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
1 min read

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு மற்றும் கோடை விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை.

தமிழகப் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு வரும் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 21 வரை நடைபெறவுள்ளது. இதனால் இந்த மாணவர்களுக்குக் கோடை விடுமுறை ஏப்ரல் 22-லிருந்து தொடங்குகிறது.

தமிழகப் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் இந்த மாணவர்களுக்குக் கோடை விடுமுறை ஏப்ரல் 25-லிருந்து தொடங்குகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in