தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ரோந்துப் பணியிலிருந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளார்கள்.

37 தமிழக மீனவர்களைக் கைது செய்தது மட்டுமில்லாமல் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

விசாரணை நடத்திய பிறகு மீனவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in