சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையில் காவல் துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கி. புனிதா, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், வேலூர் மாவட்டம்
து. வினோத்குமார், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் பிரிவு, மத்தியக் குற்றப்பிரிவு, சென்னை
ச. சௌமியா, காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலூர் மாவட்டம்
ஐ. சொர்ணவள்ளி, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்
நா. பார்வதி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
பெ. ராதா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்
செ. புகழேந்தி கணேஷ், காவல் துணை கண்காணிப்பாளர், செங்கல்பட்டு உட்கோட்டம், செங்கல்பட்டு மாவட்டம்
இரா. தெய்வராணி, காவல் ஆய்வாளர், பெருந்துறை காவல் வட்டம், ஈரோடு மாவட்டம்
ஆ. அன்பரசி, காவல் ஆய்வாளர், பொன்னை காவல் நிலையம், வேலூர் மாவட்டம்
நா. சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர், ஊரக உட்கோட்டம், தூத்துக்குடி மாவட்டம்
பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றியதற்காக சிறந்த பொதுச்சேவைக்கான முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
தா.ச. அன்பு, காவல் துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை
இ. கார்த்திக், காவல் கண்காணிப்பாளர்-I, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை
சி.ர. பூபதிராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சேலம் சரகம்.
க. சீனிவாசன், காவல் ஆய்வாளர், காவல் தொலைத்தொடர்பு பிரிவு, சென்னை
பு.வ. முபைதுல்லாஹ், காவல் உதவி ஆய்வாளர், உள்வட்ட பாதுகாப்புப் பிரிவு, அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.