எஸ்.பி.பி. சாலை: முதல்வர் ஸ்டாலின்

காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
எஸ்.பி.பி. சாலை: முதல்வர் ஸ்டாலின்
1 min read

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் நினைவு தினமான இன்று, சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில், “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.

காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in