பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் வியாழன் முதல் அதாவது செப்டம்பர் 12 முதல் தொடங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காகவும், கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பே தொடங்கப்படும்.
இந்நிலையில் 2025 ஜனவரி 13 அன்று போகி பண்டிகையும் 14 அன்று பொங்கல் பண்டிகையும் 15 அன்று மாட்டுப் பொங்கலும் 16 அன்று காணும் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன.
இதை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2025 ஜன. 10 அன்று ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் செப். 12 அன்றும், ஜன. 11 அன்று பயணம் செய்பவர்கள் செப். 13 அன்றும், ஜன. 12 அன்று பயணம் செய்ய விரும்புவோர் செப். 14 அன்றும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.