பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை மற்றும் தூத்துக்குடிக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
1 min read

பொங்கல் பண்டிகை, சபரிமலை மகரவிளக்கு பூஜை ஆகியவற்றை முன்வைத்து சென்னை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

தெற்கு ரயில்வேயின் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (ஜன.8) அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் பட்டியல் பின்வருமாறு,

எஸ்எம்விடி பெங்களூரு – தூத்துக்குடி சிறப்பு ரயில் (எண். 06569), ஜனவரி 10-ல் (வெள்ளிக்கிழமை) எஸ்எம்விடி பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (ஜனவரி 11) காலை 11 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

தூத்துக்குடி – மைசூரூ சிறப்பு ரயில் (எண். 06570), ஜனவரி 11-ல் (சனிக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து நண்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (ஜன.12) காலை 6.30 மணிக்கு மைசூரூவை சென்றடையும்.

திருவனந்தபுரம் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் பண்டிகை சிறப்பு ரயில் (எண். 06058), ஜனவரி 15-ல் (புதன்கிழமை) திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து அதிகாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் பண்டிகை சிறப்பு ரயில் (எண். 06059), ஜனவரி 16-ல் (வியாழக்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 1 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (ஜன.17) இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும்.

எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் பண்டிகை சிறப்பு ரயில் (எண். 06046), ஜனவரி 16-ல் (வியாழக்கிழமை) எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (ஜன.17) காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் பண்டிகை சிறப்பு ரயில் (எண். 06047), ஜனவரி 17-ல் (வெள்ளிக்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in