
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் இயங்கும் இந்த ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குத் தெற்கு ரயில்வே ஏற்கெனவே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து வியாழன், வெள்ளி, திங்கட்கிழமைகளில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் ஆயுத பூஜை விடுமுறையில் இருந்தே தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் செங்கோட்டை இடையே தாம்பரம் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் எழும்பூர் மதுரை இடையில் முன்பதிவு இல்லா மெமு எக்பிரஸ் ஆகியவை நாளை இயக்கப்படுகின்றன.
அதேபோல் மதுரை - தாம்பரம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் எழும்பூர் - மதுரை இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அக்டோபர் 18 அன்று இயக்கப்படுகின்றன.
அக்டோபர் 20 அன்று செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலும், அக்டோபர் 21 அன்று மதுரை - தாம்பரம் முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் ரயிலும் மறுமார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. இவற்றின் முன்பதிவு இன்று மாலை 4 மணியுடன் தொடங்கியுள்ளது.