பொங்கல் பண்டிகைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு | Special Trains |

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது...
பொங்கல் பண்டிகைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 min read

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அப்போது மக்கள் பயணத்திற்கு ஏதுவாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கும். அதன்படி இந்த ஆண்டும் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (06012) வரும் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (06011) வரும் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (06054) வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (06053) வரும் 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி வந்துசேரும்.

திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (06156) வரும் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில், (06055) வரும் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.

திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (06158) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (06057) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.

கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (06034) வரும் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சிறப்பு ரயில் (06033) வரும் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு கோவை வந்துசேரும்.

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சிறப்பு ரயில் (06070) வருகிற 8 அன்று திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (06069) ஜனவரி 9 அன்று சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை திருநெல்வேலி வந்து சேரும்.

ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயில் (06025) வருகிற 13 அன்று ஈரோட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (06026) வருகிற 14 அன்று செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு போத்தனூர் புறப்பட்டும்.

ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (06106) வருகிற 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில் (06105) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜன. 4) காலை 8 மணி முதல் தொடங்குகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Southern Railway has issued an announcement regarding special trains to be operated across Tamil Nadu on the occasion of Pongal festival.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in