சோ ராமசாமி மனைவி காலமானார்

எஸ்.வி. சேகர், வி.கே. சசிகலா உள்ளிட்டோர் சௌந்தரா ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
சோ ராமசாமி மனைவி காலமானார்
படம்: https://x.com/SVESHEKHER
1 min read

சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (84) உடல்நலக் குறைவால் காலமானார்.

நடிகர், அரசியல் விமர்சகர், துக்ளக் இதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்ட சோ ராமசாமி கடந்த 2016-ல் காலமானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்தார் சோ ராமசாமி. 1999 முதல் 2005 வரை மாநிலங்களவையில் நியமன எம்.பி.யாக இருந்த இவர் தனது 82 வயதில் மாரடைப்பால் காலமானார்.

இவருடைய மறைவுக்குப் பிறகு மனைவி சௌந்தரா ராமசாமி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.

இவருக்கு ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளார்கள். இவருடைய இறுதிச் சடங்கு நாளை முற்பகல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.வி. சேகர், வி.கே. சசிகலா உள்ளிட்டோர் சௌந்தரா ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in