தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு: சுவாரஸ்ய குறிப்புகள் | NDA | AIADMK | BJP |

சென்னையில் பாஜக 3 தொகுதிகளிலாவது போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு...
Tamil Nadu elections: AIADMK to contest 169 seats, releases list of 65 seats for NDA allies
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
1 min read

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமை வகித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறுபுறம், தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகளையும், தங்கள் வசம் வைத்துக்கொண்டிருக்கும் தொகுதிகளையும் கவனிக்கும்போது சுவாரஸ்யமான சில தகவல்கள் கிடைக்கின்றன.

  • பாஜக 27, பாமக, 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, தமமுக 1, புரட்சி பாரதம் 1 எனக் கூட்டணிக் கட்சிகளுக்கு 65 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அதிமுக மீதியுள்ள 169 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. திமுக தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் திமுக உதய சூரியன் சின்னத்தில் நேரடியாக 164 தொகுதிகளிலும், அதே சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகளிலும் என மொத்தம் 175 தொகுதிகளில் உதய சூரியன் களம் காண்கிறது.

  • அதிமுக 23 பேரை அறிவித்து வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 21 பேர் முன்னாள் அமைச்சர்கள். 16 பேர் தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ளவர்கள்.

  • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அதிமுக உறுப்பினர்களின் தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் போட்டியிட்ட சி.வி. சண்முகத்திற்கு மைலம், ராஜபாளையத்தில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜிக்கு சிவகாசி, போளூர் தொகுதியில் போட்டியிட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநெல்வேலி தொகுதியும், வானதி சீனிவாசன் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவை தெற்கு தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படாமல் அதிமுகவே வைத்துக் கொண்டுள்ளது.

  • சென்னையில் பாஜக 3 தொகுதிகளிலாவது போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மயிலாப்பூர், ஆவடி ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • விஜய் போட்டியிடுவார் என்று கூறப்படும் பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பாமகவுக்கு வாக்கு வங்கி குறைவாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • சென்னையில் பெரும்பாலான இடங்களில் திமுகவும் அதிமுகவும் நேரடியாகக் களம் காண்கின்றன.

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் நாகர்கோயில், விளவங்கோடு, குளச்சல், பத்மநாதபுரம் ஆகிய 4 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர், திருவாரூர், திருச்செந்தூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆவடி ஆகிய தொகுதிகள் திமுகவின் கோட்டையாக உள்ளன. இவற்றில் பாஜக போட்டியிடுகிறது. சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, தியாகராய நகர், வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய தொகுதிகளை பாஜக தவறவிட்டுவிட்டதாக ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

Summary

Some interesting information emerges when we look at the seats allocated to the AIADMK and its alliance parties in the Tamil Nadu Assembly elections, as well as the seats they retain.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in