தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சியின் தலைவராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 316(1)-ன் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சியின் தலைவராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சியின் தலைவராக பதவியேற்றதில் இருந்து 6 வருடங்கள் அல்லது 62 வயது வரை அந்தப் பொறுப்பில் எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் இருப்பார் என்று நியமன உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பிரபாகர் ஐஏஎஸ், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக செயல்பட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபாகர் 1989-ல் அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சி. முனியநாதன் தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.