

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதற்கானப் பணிகள் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வாக்காளர்கள் டிசம்பர் 14 வரை படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 முதல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர் 4 உடன் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடையும் என முன்பு அறிவிக்கப்பட்டது. பிறகு, எஸ்ஐஆர் பணிகள் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டது. எஸ்ஐஆர் பணிகளுக்கு இன்றே கடைசி நாள் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், எஸ்ஐஆர் பணிகளை மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 14 வரை எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எஸ்ஐஆர் பணிகள் நீட்டிக்கப்படலாம் என ஆங்கில ஊடகங்களில் ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன. தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இன்று (டிசம்பர் 11) சந்தித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என செய்திகளில் வெளியாகி இருந்தன. இந்நிலையில், எஸ்ஐஆர் பணிகள் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் டிசம்பர் 14 வரை எஸ்ஐஆர் பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
குஜராத்திலும் டிசம்பர் 14 வரை எஸ்ஐஆர் பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 19 அன்று வரைவு வக்காளர் பட்டியல் வெளியாகவிருக்கிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான் & நிகோபரிலும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 18 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கெல்லாம் டிசம்பர் 23 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் டிசம்பர் 26 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரளத்தில் ஏற்கெனவே டிசம்பர் 18 வரை எஸ்ஐஆர் பணிகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அங்கு டிசம்பர் 23 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவிருக்கிறது.
Special Intensive Revision | SIR |