டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொடர்பாக மார்ச் 6 அன்று பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
பாருக்கு உரிமம் வழங்குவது, பணிமாற்றம், போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தங்கள், பாட்டிலுக்கு ரூ. 10 முதல் 30 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.