
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன், மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்குத் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. உடனடியாக இவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட, பிறகு அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.