அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: கே.ஏ. செங்கோட்டையன் | Sengottaiyan |

தன்னால் முடியாததை முடியும் என்று நம்பி அடுத்தவர்களையும் ஏமாற்றக்கூடாது...
கே.ஏ. செங்கோட்டையன் (கோப்புப்படம்)
கே.ஏ. செங்கோட்டையன் (கோப்புப்படம்)படம்: https://x.com/KASengottaiyan
1 min read

திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயலாற்றியதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையனைக் கட்சியை விட்டு நீக்கி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 1 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், சட்டப்படி அல்லாமல் சர்வாதிகார போக்குடன் தன்னைக் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆறு மாத காலமாகவே கட்சிக்கும் தலைமைக்கும் விரோதமான நடவடிக்கைகளில் செங்கோட்டையன் ஈடுபட்டு வந்தார் என்று தெரிவித்தார். மேலும் திமுகவின் பி டீமாக செங்கோட்டையன் இயங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“என்னை பொறுத்தவரையிலும் என்றைக்குமே எம்ஜிஆர் காலத்திலிருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டிலே தான் இருக்கிறேன். இப்போது வரும் பிரச்னைகளைப் பார்க்கும்போது, திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. இன்று இவருடைய அரசியலிலும் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றோரின் தலையீடுகள் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரை அதிமுக என்ற இயக்கம் வலிமை பெற வேண்டும், நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நான் என் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது என்பதுதான் தத்துவம்” என்றார்.

Summary

Former Minister Sengottaiyan said that family politics exists not only in DMK but also in AIADMK.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in