அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா உள்ளிட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரூ. 900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். இங்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நோக்கியா:
சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்திய நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.
நோக்கியா நிறுவனம், தமிழ்நாடு அரசு இடையே ரூ. 450 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிறுசேரி சிப்காட்டில் நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பேபால் நிறுவனம்:
பேபால் நிறுவனம் சென்னையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
பேபால் நிறுவனம், தமிழ்நாடு அரசு இடையே சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுக்கான மேம்பாட்டு வளர்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்:
செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்புக்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கு முன்னணி நிறுவனம் இது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்துடன் ரூ. 150 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மைக்ரோசிப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:
மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனம் 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இங்கு 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
ரூ. 250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இன்பிங்ஸ் நிறுவனம்:
இன்பிங்ஸ் ஹெல்த்கேர் சுகாதார தொழில்நுட்ப நிறுவனம் கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஜூலையில் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தைத் தேர்வு செய்துள்ளது.
ரூ. 50 கோடி முதலீட்டில் 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
அப்ளைடு மெட்டீரியல்ஸ்:
தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோவையிலும் அமைத்துள்ளது.
500 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: