காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை

முன்பு, அக்டோபர் 4-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை
1 min read

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 7-ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் காலாண்டுத் தேர்வு விடுமுறை 9 நாள்களுக்கு வழங்கப்படும். நிகழாண்டில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 வரை 5 நாள்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 4-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதிலும் சனி, ஞாயிறு, அக்டோபர் 2 என வழக்கமான விடுமுறை நாள்கள் 3 நாள்கள் என்பதால் காலாண்டுத் தேர்வு விடுமுறை இரண்டு நாள்கள் என்ற அளவிலேயே இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பீடு செய்து, எமிஸ் தளத்தில் மாணவர்களின் மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் தேவைப்படும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. எனவே, மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டிக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்குக் காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in