சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கு: அதிமுக கேவியட் மனு தாக்கல்

மேல்முறையீடு செய்தால் தங்கள் வாதங்களை கேட்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா
சசிகலாANI

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பணியாற்றிய சசிகலா 2017-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தன்னை கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கியதை எதிர்த்து சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீர்மானம் செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் தங்கள் வாதங்களை கேட்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in