குன்னூருக்கு சுற்றுலா வந்த வடஇந்தியப் பெண்: தேர்தல் ஆணையம் ரூ. 69,000 பறிமுதல்

பணத்தை பறிமுதல் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

சுற்றுலாவுக்காக வந்த வடமாநில பெண்ணிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 69,000 பறிமுதல் செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாவுக்காக வந்த வடமாநில தம்பதியிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 69000 பறிமுதல் செய்ததால் அந்த பெண் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 50000 மேல் யாரும் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வந்த காரை பறக்கும் படையினர் சோதனை செய்ததில் அவர்களிடம் ரூ. 69000 இருந்ததாகத் தெரிகிறது இந்நிலையில் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் பிறகு அந்த தம்பதியினர், இவ்வளவு பணம் கையில் கொண்டு வரக்கூடாது என்று தங்களுக்கு தெரியாது எனவும், தங்களின் பணத்தைத் திரும்பத் தருமாறும் கேட்டுள்ளனர்.

பணத்தை பறிமுதல் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in