
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் சிவகாசியில் 95 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிவகாசி பகுதியில் மட்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையாகி உள்ளதாக தமிழ்நாடு வணிகர்கள் கூட்டமைப்பு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை காரணமாக இந்தாண்டு 75 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.