
தமிழ்நாட்டில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 ரொக்கமாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி அறிவித்தார். இதற்கான டோக்கன் விநியோகப் பணிகள் கடந்த 7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த அறிவிப்புக்கு சிலரிடமிருந்து விருப்பமின்மையும், அதிருப்தியும் வெளிப்பட்டது. இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை ரூ. 1,000 ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.