மெட்ரோ ரயிலுக்காக இடிக்கப்படும் பிரபல சென்னை மேம்பாலம்!

மெட்ரோ ரயிலுக்காக இடிக்கப்படும் பிரபல சென்னை மேம்பாலம்!

சென்னை ராயப்பேட்டை ஹை ரோடு - டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு மேம்பாலத்தின் ஒரு பகுதி மெட்ரோ ரயில் பணிக்காக இடிக்கப்படவுள்ளது.

சென்னை முழுவதும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 116 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ள மூன்றாவது வழித் தடத்தின் ஒரு பகுதியாக டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருக்கிறது. இந்த ரயில் நிலையம் அமையவிருக்கிற இடத்தில் ராயப்பேட்டை ஹை ரோடு - டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலத்தினுடைய அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மெட்ரோ ரயில் நிலையத்தை அமைப்பதற்காக இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுகிறது. பூமிக்கடியில் டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, மேம்பாலமானது மீண்டும் புதிதாகக் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மூன்றாவது வாரத்திலிருந்து பாலத்தை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஜந்தா சந்திப்பு ஆர்.கே. சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்கெட் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுப் பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் போக்குவரத்து மாற்றமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in