அதிமுக முன்னாள் அமைச்சர்
ஆர்.எம். வீரப்பன் காலமானார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் காலமானார்

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம். வீரப்பன்.
Published on

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 98.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றிய ஆர்.எம். வீரப்பன், பாட்ஷா உட்பட பல தமிழ் படங்களைத் தயாரித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் இருந்தபடியும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் மூச்சு திணறல் காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வீரப்பன் சென்னையில் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in