மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு திட்ட முதலீட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும்..
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். 2024-25-ம் நிதியாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பு முதல் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 19 அன்று மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி, நிதித் துறைச் செயலர், தலைமைப் பொருளாதார ஆலோசகர், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இதைத் தொடர்ந்து பொருளாதார வல்லுநர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோரை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதியை ஒதுக்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு திட்ட முதலீட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மத்திய அமைச்சரவைக் குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இதற்கு ஒப்புதல் அளித்து, புதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்பதை நிர்மலா சீதாராமனிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in