எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?: வானிலை ஆய்வு மையம் தகவல் | Rain Alert | Weather Report |

மோந்தா புயல் உருவாகும் அக்டோபர் 27 அன்று எந்தெந்த மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்றும் தகவல்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 25) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 24 நிலவரப்படி இயல்பைவிட அதிகளவில் மழை பெய்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அக்டோபர் 26 அன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அக்டோபர் 27 அன்று மோந்தா புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தப் புயலானது ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவே தற்போதைய நிலையில் கணிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்தப் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

இதையொட்டி தமிழ்நாட்டில் மழை குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.

அக்டோபர் 25:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் மாவட்ட மலைப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு மாவட்டத்துக்கும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை மற்றும் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அக்டோபர் 26:

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27:

மோந்தா புயல் உருவாகும் அக்டோபர் 27 அன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டைக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 28:

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Summary

The Meteorological Department has warned of the possibility of heavy rainfall today (October 25) in districts including Chennai, Thiruvallur, and Chengalpattu.

Rain Alert | Red Alert | Yellow Alert | Orange Alert | Chennai Rain | Chennai Rains | Weather Report | Weather Alert | IMD Chennai | RMC Chennai | Bay of Bengal | Low Pressure | Low Pressure Area | Arabian Sea | Andaman Sea | Montha Cyclone | Cyclone Alert | Weather Update | North East Monsoon |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in