தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்: ராமநாதபுரம் மீனவர் சங்கம்

இந்தச் சட்டம் மீனவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மீனவர் சங்க உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்: ராமநாதபுரம் மீனவர் சங்கம்
ANI

மீனவர்கள் தொடர்பாக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்போவதாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.

`மீனவர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட படகுகள் இருந்ததால் அவற்றில் ஒன்றுக்கு மட்டுமே மானிய விலையில் டீசல் வழங்கப்படும் என்ற உட்பிரிவு இந்தச் சட்டத்தில் உள்ளது. இந்த சட்டம் மீனவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று ராமநாதபுரம் மீனவர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், `இந்தப் புதிய சட்டத்தில் 60 வயதுக்கு மேலான மீனவர்களுக்கு நிவாரணம், சேமிப்பு போன்ற அரசு அளிக்கும் சலுகைகள் ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ராமேஸ்வரம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்த மீனவர் ஒருவருக்கு, உரிய நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை’ என்றும் மீனவர் சங்கத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

`திமுக மீனவர்கள் மாநாட்டில் டீசலுக்கான மானியத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றத் தவறிவிட்டார். கடலில் பிடிக்கப்படும் இறால், நண்டு போன்றவற்றுக்கு உரிய விலை கிடைப்பதில்லை’ என்று மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த ஜூன் 23-ல் பாக் ஜலசந்தியில் உள்ள நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in