ஒசூரில் விமான நிலையம்,மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை | Ramadoss | PMK |

ஜெர்மனி, லண்டனில் இருந்து முதலீடுகளை ஈர்த்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டு என்றும் கருத்து...
ஒசூரில் விமான நிலையம்,மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை | Ramadoss | PMK |
https://x.com/drramadoss
1 min read

ஒசூருக்கு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாமக மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று (செப். 13) ஓசூர் வந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது :

ஒசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கையாக உள்ளது. பெங்களூரைப் பொறுத்தவரை, அங்கிருந்து விமான நிலையத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஆகவே, ஒசூரில் ஒரு விமான நிலையம் அமைய வேண்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள ஓசூருக்கு மெட்ரோ ரயில் அவசியம் தேவை. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரியை இணைக்கும் ஒரு தொழில் பெருவழிச் சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

பாமக கட்சிக்கு உள்ளே பிரச்சனைகள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், இந்தப் பிரச்னைகள் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுவதாகவே நான் பார்க்கிறேன். இது ஒரு போட்டியாக இருக்கிறது, கட்சி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் தனது கருத்துகளைப் பகிர்கிறார், அதில் தவறு இல்லை. நானும் இங்கு என் கருத்துகளைத் தைரியமாக பகிர்கிறேன்.

முதல்வர் லண்டன், ஜெர்மனி சென்று 15,000 கோடி முதலீடுகளை ஈர்த்ததாக கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. நாங்களும் அதையே விரும்புகிறோம். ஒசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது, தொழில் முனைவோர் இங்கு அதிக அளவில் நிறுவனங்களை அமைத்து வருகின்றனர். அரசும் இதற்கு நல்ல ஆதரவு அளிக்கிறது. ஆனால், விவசாயம் பின்தங்குவதாக விவசாயிகள் மத்தியில் பெரிய குற்றச்சாட்டு உள்ளது. ரோஜா சாகுபடி முன்பு முன்னணியில் இருந்தது, இப்போது அது பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனையும் உள்ளது. விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மை.”

இவ்வாறு பேசினார்.

PMK | Ramadoss | Hosur |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in