ரஜினி இரு நாள்களில் வீடு திரும்புவார்: அப்போலோ

ரஜினியின் இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாகத் தகவல்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும், இரு நாள்களில் வீடு திரும்புவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 30 அன்று ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இதயத்திலிருந்து செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது. இது அறுவைச் சிகிச்சை முறையில் அல்லாமல் சரிசெய்யப்பட்டது. வீக்கத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை திட்டமிட்டபடி சரியாக நடந்து முடிந்துள்ளது. இதை ரசிகர்கள் மற்றும் அவருடைய நலன் விரும்பிகளிடம் தெரிவிக்க விரும்புகிறோம். ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். இரு நாள்களில் வீடு திரும்புவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in